நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் பெண்களுக்குள் மனக்கசப்பு தோன்றக்கூடும். வீடு கட்டும் பணியை தள்ளிப்போடுங்கள். தொழில்புரிவோர் ஊழியர்களால் தொல்லைகளை சந்திக்க நேரிடும். உறவுகளுக்குள் சச்சரவு குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி களின் சொல்படி நடப்பதே சாமர்த்தியம். பிள்ளைகளால் சிறு சங்கடம் வரலாம். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வணங்குங்கள்.