சந்தோஷ் தேஷ்முக் படுகொலை பற்றி விசாரிக்க சிறப்பு... ... 01-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சந்தோஷ் தேஷ்முக் படுகொலை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மும்பையில் மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறும்போது, சந்தோஷ் தேஷ்முக் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. வழக்கு விரைவாக விசாரிக்கப்படும். இதற்காக கோர்ட்டில் அரசு வேண்டுகோள் வைக்கும். குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். பீட் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்த தேஷ்முக் (வயது 45), கடத்தி, சித்ரவதை செய்யப்பட்டு சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் பின்னணி உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

Update: 2025-01-02 11:45 GMT

Linked news