பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல்... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் ஆட்சி இருக்கும் வரை யாருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள். எனவே, பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான Spray, Emergency SOS Alarm உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு நிலை வந்ததற்கு, உங்களை போன்றே நானும் வருந்துகிறேன் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
Update: 2025-01-02 13:27 GMT