யூனியன் கார்பைடு கழிவுகளை அழிக்கும்... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
யூனியன் கார்பைடு கழிவுகளை அழிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு- 2 பேர் தீக்குளித்தனர்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் கழிவுகள், தார் மாவட்டம் பீதாம்பூர் தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக அழிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தின்போது 2 நபர்கள் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-01-03 09:11 GMT