சீனா அறிவித்த புதிய மாவட்டங்கள்.. இந்தியா கடும்... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சீனா அறிவித்த புதிய மாவட்டங்கள்.. இந்தியா கடும் எதிர்ப்பு

சீனாவின் ஹோட்டன் மாகாணத்தில் 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்திருக்கிறது. இந்த மாவட்டங்களின் சில பகுதிகள் இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கில் வருவதால், இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள இந்தியப் பகுதியின் சட்டவிரோத சீன ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார். தூதரகம் வாயிலாக சீனத் தரப்பிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Update: 2025-01-03 11:47 GMT

Linked news