பள்ளியில் குழந்தை உயிரிழப்பு- முதலமைச்சர்... ... 03-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பள்ளியில் குழந்தை உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த லியா லஷ்மி என்ற 5 வயது குழந்தை, அங்குள்ள கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த குழந்தை லியா லக்ஷ்மியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-01-03 15:01 GMT