பட்டாசு ஆலை வெடிவிபத்து; கவர்னர் இரங்கல் ... ... 04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பட்டாசு ஆலை வெடிவிபத்து; கவர்னர் இரங்கல்
விருதுநகரில் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்து உள்ளார்.
Update: 2025-01-04 13:51 GMT