டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கல்காஜி... ... 05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கல்காஜி தொகுதியில், முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இந்நிலையில், பிதூரி பொது கூட்டமொன்றில் பேசும்போது, பீகாரில் லாலு பிரசாத், ஹேமா மாலினியின் மென்மையான கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என கூறினார்.
அவர் பொய் கூறியுள்ளார். அதனை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால், நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஓக்ளா மற்றும் சங்கம் விகார் பகுதியில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தியது போன்று, கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று அமைப்போம் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம் என்று சர்ச்சையாக பேசினார்.
Update: 2025-01-05 10:09 GMT