திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில்... ... 31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிய்ட்ட 7 அறிவிப்புகள்:-
* குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் பயிலரங்கங்கள் நடத்தப்படும்.
* ஆண்டுக்கு 133 கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்.
* தமிழ் திறனித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.
* குறளும், உரையும் அரசு அலுவகங்களைப் போல தனியார் அலுவலகங்களிலும் எழுத உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
Update: 2024-12-31 06:52 GMT