முக்கியமான வசதிகள் என்று பார்த்தால் ஐபோன் ஏர்... ... ஆப்பிள் வருடாந்திர நிகழ்ச்சி .. ஐபோன் 17 சீரீஸ் அறிமுகம்: இந்தியாவில் விலை என்ன?

முக்கியமான வசதிகள் என்று பார்த்தால் ஐபோன் ஏர் மாடலில் வயர்லாஸ் மேக்சேஃப் சார்ஜிங் வசதி மற்றும் நீடித்த பேட்டரி லைஃப் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபோன்17 மாடலில் மெயின் கேமரா 48 மெக பிக்‌ஷல் அல்ட்ரா வெய்டு மற்றும் 12 மெகா பிக்‌ஷல் மேக்ரா கேமரா வசதிகளுடன் வந்துள்ளது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில், ஃபோனின் முழு அகலத்திற்கும் பரவும் வகையில் புதிய கேமரா வடிவமைப்பு இடம்பெறும். * 48 மெகாபிக்சல் கேமராவில் 1x, 2x, 4x, மற்றும் 8x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும். மேலும், இது 8K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. இந்த இரண்டு ப்ரீமியம் மாடல்களிலும் அதிவேக இணைப்பு வசதிக்காக, ஆப்பிள் வடிவமைத்த வைஃபை 7 சிப் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிரகாசமான டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கும் என்றும், 39 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் ஆதரவை வழங்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2025-09-09 19:52 GMT

Linked news