பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி

பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (79), காங்கிரஸ் (19) ஆகிய கட்சிகளுடன் இணைந்து நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியுள்ளார். அதோடு முதல் மந்திரி பொறுப்பையும் ராஜினாமா செய்து இருக்கிறார். பாஜகவுக்கு 78 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அக்கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நிதிஷ்குமார் அமைக்க உள்ளார். நிதிஷ் குமார் கடந்த 9 ஆண்டுகளில் 4-வது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார்.

Update: 2024-01-28 06:32 GMT

Linked news