தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த... ... தமிழக பட்ஜெட் 2025-26 : கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த கவர்னர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2025-26-ம் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.