5 ஆண்டுகளில் முதன்முறையாக... மத்திய ஆயுத... ... 02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

5 ஆண்டுகளில் முதன்முறையாக... மத்திய ஆயுத பாதுகாப்பு படையில் தற்கொலை விகிதம் 40 சதவீதம் சரிவு

2023-ம் ஆண்டில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.) தற்கொலை விகிதம் 1 லட்சத்திற்கு 16.98 என்ற அளவில் இருந்தது. இந்த விகிதம் நடப்பு ஆண்டில் 40 சதவீதம் குறைந்து உள்ளது.

இதன்படி, 2024-ம் ஆண்டில் இந்த விகிதம் 1 லட்சத்திற்கு 9.87 என்ற அளவில் உள்ளது. மத்திய உள்விவகார துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த படையில் 5 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த விகிதம் குறைந்துள்ளது. இதனால் முக்கியதொரு மைல்கல்லை அடைந்து சி.ஐ.எஸ்.எப். சாதனை படைத்துள்ளது.

Update: 2025-01-02 14:44 GMT

Linked news