அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-வது சுற்று... ... அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-வது சுற்று முடிவடைந்து உள்ளது. அதன் முடிவில் 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. இதில், தலா 11 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்தி ஆகிய 3 பேர் முன்னிலையில் உள்ளனர். மேல பனங்காடி முத்துராக்கு 9 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, 9-வது சுற்று தொடங்கி நடந்து வருகிறது. போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 69 பேர் காயம் அடைந்து உள்ளனர். 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Update: 2024-01-17 11:33 GMT