திருச்சியில் நாளை மக்களை சந்திக்கிறேன் - தவெக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை (சனிக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். அன்றைய தினம் மாலை அரியலூர், குன்னம், பெரம்பலூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் சத்திரம் பஸ் நிலையத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி தர வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்திருந்தார்.ஆனால் அங்கு அனுமதி தர மறுத்த போலீசார் திருச்சி மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர். 

Update: 2025-09-12 10:26 GMT

Linked news