ஒற்றை தலைமை: ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்

ஒற்றை தலைமை: ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து முடிவெடுக்க முடியும் - வைத்திலிங்கம் தரப்பு

அதிமுக வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, வைத்திலிங்கம் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

ஒற்றைத் தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் விரும்பினாலும், அதை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எவரும் கூறமுடியாது என வைத்திலிங்கம் தரப்பு வாதிட்டு வருகிறது.

பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில், விளக்கம் கேட்காமல் தன்னை நீக்கியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது.

Update: 2023-03-22 09:29 GMT

Linked news