ராமேஸ்வரம்: மண்டபம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக... ... ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ராமேஸ்வரம்: மண்டபம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இலங்கையில் இருந்து இந்திய விமானபடையின் MI 17 ரக ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றனர்.
மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, எம்.பி. ஜி.கே.வாசன், பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, ஹெச்.ராசா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ராமநாதபுரம் கலெக்டர் உள்ளிட்டோரும் வரவேற்றார்கள்.
Update: 2025-04-06 06:47 GMT