இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025
இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கிராலியும், பென் டக்கெட்டும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த தொடக்கத்தை பயன்படுத்தி, மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலக்கை விரைவில் விரட்டிப்பிடிக்கும் நோக்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பெத்தேல் 40 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 3-1 என்ற நிலையில் உள்ளது. 5 நாட்களை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், இரண்டே நாளில் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.