மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய சுப்ரீம்கோர்ட்டு அனுமதி
மேகதாது அணை கட்ட தமிழ்நாடு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும்நிலையில், அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது.
மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது. எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை தெளிவுபடுத்துவதாக கூறிய நீதிமன்ற அமர்வு, மேகதாது தொடர்பாக தற்போது சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.