ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்:... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் 'சீல்' உடைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகிறது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் அடங்கிய 3 பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு பெட்டியாக சீல் உடைக்கப்பட்டும் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.