அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினரும்,... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினரும், மல்புத்த வீரருமான பஜ்ரங் புனியா, அவரது மனைவி சங்கீதா போகத் ஆகியோர் ஜாஜர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா கூறுகையில், "முடிந்தவரை அரியானா மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று அரியானாவில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளது. 2005-2014 வரை ஆட்சியில் இருந்த அரசால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளில், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் என யாரெல்லாம் குரல் கொடுத்தாலும், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது" என்றார்.
Update: 2024-10-05 07:37 GMT