சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்:... ... சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.. “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்துள்ள 2 தீர்மானங்களையும் வரவேற்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சங் பரிவார் கொள்கையை வெளிப்படுத்துகிறது;

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தேர்தல் முறை நடைமுறைக்கு வந்தால் உள்ளாட்சி பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமின்றி தேசிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர் கூறினார். 

Update: 2024-02-14 06:36 GMT

Linked news