புயல் சின்னம் எதிரொலி: பாம்பனில் 3வது நாளாக கடல்... ... சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை
புயல் சின்னம் எதிரொலி: பாம்பனில் 3வது நாளாக கடல் சீற்றம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதுடன் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. குடியிருப்பு வாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்தனர். சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் பாம்பனில் 3வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மண்டபம்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
Update: 2024-11-28 05:52 GMT