அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 11 காளைகளை... ... அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 11 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்தி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.

போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 56 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

7-வது சுற்று முடிவில், 573 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. 8-வது சுற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கி உள்ளனர்.

Update: 2024-01-17 10:42 GMT

Linked news