சென்னையில் போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025

சென்னையில் போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்றும் திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2025-12-26 07:29 GMT

Linked news