அமெரிக்காவில் இந்தியர்-வம்சாவளி நபர் கொலை;... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
அமெரிக்காவில் இந்தியர்-வம்சாவளி நபர் கொலை; குடியேற்றக் கொள்கையை சாடிய டிரம்ப்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட குடியேற்றக் கொள்கைகளை, தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். டல்லாஸ் நகரில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்து வந்த நாகமல்லையா என்பவர், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை கொலை செய்தவர் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் வழக்கம் இனி முடிவுக்கு வரும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
Update: 2025-09-15 07:54 GMT