சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2.15 மணிக்கு சென்னைக்கு வருவார் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவரது வருகையில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவரது வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுராந்தகம் வர உள்ளார். 

Update: 2026-01-23 09:26 GMT

Linked news