பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அண்ணாபல்கலைக்கழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அண்ணாபல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “ அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தநிலையில், தற்போது இந்த கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.


Update: 2025-06-03 07:56 GMT

Linked news