மும்பை விமான நிலையத்தில்ரசிகருடன் செல்பி எடுக்க மறுத்த அல்லு அர்ஜுன்

திருப்பதி,

நடிகர் அல்லு அர்ஜுன் சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக மும்பை சென்றிருந்தார். அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட தயாரானார்.மும்பை விமான நிலையத்தில் அவர் தனது பாதுகாவலர்களுடன் நடந்து சென்றார். அப்போது ரசிகர் ஒருவர் வேகமாக ஓடி சென்று அல்லு அர்ஜுன் அருகே நின்று செல்பி எடுக்க முயன்றார். இதற்கு அல்லு அர்ஜுன் எதிர்ப்பு தெரிவித்து விட்டு வேகமாக சென்றார்.

இதனை தொடர்ந்து அவருடைய பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர்.அல்லு அர்ஜுன் ரசிகருடன் செல்பி எடுக்க மறுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தரப்பினர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.அல்லு அர்ஜுன் தனது ரசிகருக்காக சில நிமிடங்களை ஒதுக்கியிருக்கலாம்."அவர் மிகவும் போலியான புன்னகை கொண்டவர். அல்லு அர்ஜுன் இன்னும் புஷ்பா கதாபாத்திரத்தில் இருந்து மாறவில்லை. அதே குணத்துடன் இருப்பதாகத் தெரிகிறது என விமர்சித்தனர். இதற்கு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Update: 2025-05-04 11:58 GMT

Linked news