காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளது. காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம். சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றி வளர்ச்சி பணிகளை உருவாக்குவோம். இதற்கு நாங்கள் பொறுப்பு. பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவோம்” என்று கூறினார்.
Update: 2025-02-05 06:25 GMT