தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது - மதுரை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும்படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதன்படி இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:-
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம். தீபமேற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்க முந்தைய உத்தரவுகள் உள்ளன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும். மத்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோயில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும். ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது.
மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்ற உதவி செய்ய வேண்டும். தனிநபர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது. தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.