இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது
சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த, அதன் எக்ஸ் வலைதள கணக்கு திடீரென நேற்று முடங்கியது. இதனால், செய்திகளை படிக்க முடியாமல் வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை இந்தியாவில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைதள கணக்கு முடக்கம் சரி செய்யப்பட்டது. இதனால், மீண்டும் செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. அதனுடன் இந்தியாவில் வெளிவரும், துருக்கி ஊடகங்களில் ஒன்றான டி.ஆர்.டி. வேர்ல்டு மற்றும் சீனாவின் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ் ஆகியவற்றிற்கான எக்ஸ் சமூக ஊடக கணக்குகளும் சரி செய்யப்பட்டன.