திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண்பதற்காக திரளான பக்தர்களும் வந்து பங்கேற்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-07-07 08:31 GMT

Linked news