யு.ஜி.சி.க்கு எதிரான முதல்-அமைச்சரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
யு.ஜி.சி.க்கு எதிரான முதல்-அமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு அ.தி.முக. ஆதரவு
தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், யு.ஜி.சி.க்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான அ.தி.முக. ஆதரவு தெரிவித்து உள்ளது.
இந்த விதிகளை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
Update: 2025-01-09 07:03 GMT