விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
நீலாங்கரையில் உள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்; இதனைத்தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தநிலையில், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Update: 2025-10-09 08:09 GMT