வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்த முயற்சி- 2 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்த முயற்சி- 2 பேர் கைது

மிசோரம் மாநிலத்தில் இருந்து ரூ.1.48 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்த முயன்றதாக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய கடத்தல் நடவடிக்கைகள் குறித்த உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, அசாம் ரைபிள் படையினர், மிசோரம் காவல்துறை மேற்கொண்ட சோதனையின்போது இருவரும் சிக்கி உள்ளனர். அவர்கள் கடத்த முயன்ற கரன்சி நோட்டுகள் மற்றும் இரண்டு செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Update: 2025-01-13 05:57 GMT

Linked news