அரியானா: அல்-பலா பல்கலைக்கழகத்தில் பதிவெண் இன்றி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

அரியானா: அல்-பலா பல்கலைக்கழகத்தில் பதிவெண் இன்றி நிற்கும் மர்ம கார்; விசாரணைக்கு பறந்த போலீசார்

அரியானாவின் பரீதாபாத் நகரில் தவுஜ் பகுதியில் அல்-பலா பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பிரெஸ்ஸா நிறுவன கார் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவல் அரியானா போலீசுக்கு சென்றது.

இதனை தொடர்ந்து, அரியானா போலீசின் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அடங்கிய வாகனம் ஒன்று விசாரணைக்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது. இதுதொடர்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2025-11-13 14:12 GMT

Linked news