ராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
ராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அம்பேத்கர் விவகாரத்தில் இன்று இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தள்ளிவிட்டார். அதனால், இந்த காயம் ஏற்பட்டது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.