நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்பேத்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்பேத்கர் விவகாரம் இன்று எழுப்பப்பட்டது. இதனால், இரு அவைகளில் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் அமளியால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டது என பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி இன்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே மீது தாக்குதல் நடந்துள்ளது என அக்கட்சி சார்பில் குற்றச்சாட்டாக கூறப்பட்டு உள்ளது.
Update: 2024-12-19 07:11 GMT