தங்கள் பிரச்சினை குறித்து ரவி மோகன், ஆர்த்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
தங்கள் பிரச்சினை குறித்து ரவி மோகன், ஆர்த்தி அறிக்கை வெளியிடத் தடை விதித்தது கோர்ட்டு
பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-23 08:49 GMT