8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று (மே 23ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் நாளை(மே 24ம் தேதி) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Update: 2025-05-23 08:59 GMT