பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : அனைத்து கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள இன்று (24.06.2025) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளுக்கு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2025-04-24 12:38 GMT

Linked news