கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 35 பேருக்கு கொரோனா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025
கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பெங்களூரு நகரில் 32 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருந்ததுடன், சுவாச கோளாறுகளும் இருந்துள்ளன. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. அதில், அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-05-25 05:29 GMT