‘பட்டியலினத்தவர்களை கோவிலில் வழிபாடு நடத்த விடாமல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-08-2025

‘பட்டியலினத்தவர்களை கோவிலில் வழிபாடு நடத்த விடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம்’ - ஐகோர்ட்டு உத்தரவு

கடலூர்,

கடலூரில் மாவட்டம் கரும்பூர் பஞ்சாயத்தில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பட்டியலின மக்களை நுழைய விடாமல் தடுப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்வதை தடுப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

Update: 2025-08-27 11:21 GMT

Linked news