எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள்... ... மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதிமொழி ஏற்ற கமல்ஹாசன்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.

இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த நாடாளுமன்ற முடக்கம் இன்றும் 5-வது நாளாக நீடித்தது.

இதன்படி மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதுகுறித்து அவையில் விவாதிக்கக்கோரி கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டதுடன், அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த தொடர் அமளியால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 

Update: 2025-07-25 08:17 GMT

Linked news