எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது - ஓபிஎஸ்... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது - ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்
பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் பரபரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.