பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் -... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிமையான காரணம் கூறி நீக்கியுள்ளனர்.
ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி. உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல. கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்த அனைத்தையும் செய்து விட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.