"எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
"எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும்" - ஈபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தரப்பு வாதம் நிறைவு பெற்றதையடுத்து ஈபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.
ஓபிஎஸ் தனக்கென தனிக்கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார் : நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும்.
பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஓபிஎஸ் தரப்பு தான் உண்மையான கட்சி என்றால், தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மன்றத்திலும் பலத்தை நிரூபிக்க வேண்டும்.