"மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில்... ... லைவ்:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம்
"மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை" - அதிமுக தரப்புவாதம்
இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது.
52 ஆண்டுகால அதிமுகவில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவிதான் இருந்துள்ளது. இடையில் 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இருந்தன. உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய அவகாசம் தேவை என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு.
கட்சியில் ஆதரவில்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. கட்சி முடிவு செய்த நிபந்தனைகளை நீதிமன்ற சட்ட விரோதம் எனக் கூற முடியாது. உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. பெங்களூரு புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கும் மு எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்று அதிமுக வாதங்களை முன்வைத்து வருகிறது.