கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்...!

2025-26 நிதியாண்டுக்குள், நிதி பற்றாக்குறை விகிதத்ததை 4.5%-க்கும் கீழ் குறைப்பதே அரசின் நோக்கம்!

*மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

* சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன

* உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை ஈர்க்கும் வண்ணம் நாடு முழுவதும் உள்ள 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும்

*வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை

* பொம்மைகள், மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்

* மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி

* பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்

* இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்

*நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

* மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு

* நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4% ஆக இருக்கும் என கணிப்பு!

* ரூ10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Update: 2023-02-01 07:29 GMT

Linked news